நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியயை அமைக்க போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இதைத்தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தான் கமல்ஹாசன் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் இன்று காலை 11 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் கமல்ஹாசன் என்று மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வருகை தரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும், அதை நிறைவேற்ற செய்தியாளர்கள் ஒத்துழைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …