சர்ச்சைக்குறிய பேச்சு!முன் ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய கருத்து ஓன்று சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதும் இதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.மேலும் கமல் மீது பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரில் கமல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது கடந்த மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.பின் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.ரூ.10 ஆயிரம் மற்றும் 2 நபர் உத்தரவாதத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனால் நேற்று கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜரானார். உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டார் கமல்ஹாசன்.