நான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ள தயார்.! கமல்ஹாசன் அதிரடி பேச்சு.!

Default Image

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் நான் சந்தோசமாக ஒதுங்கிக்கொள்ள தயார் என கமல்ஹாசன் ஒரு கல்லூரி நிகழ்வில் குறிப்பிட்டார். 

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் அண்மையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் அரசியல் பற்றி பேசினார்.

வயது சராசரி : அவர் கூறுகையில், இந்தியர்களின் வயது சராசரி 29 என குறிப்பிட்டார். அதே போல பாராளுமன்ற உறுப்பினர்களின் வயது சராசரி 54 ஆகும். இந்த வயது வித்தியாசத்தை முதலில் உடைக்க வேண்டும். எனவும்,

அரசியலுக்கு வாருங்கள் : இந்த வயது வித்தியாசத்தை குறைக்க முதலில் நீங்கள் (மாணவர்களை கைநீட்டி) அரசியலுக்கு வரவேண்டும். எனக்கும் வ்யாதாகிவிட்டது நான் ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் வந்துவிட்டு, இந்த நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் ஓய்வெடுங்கள் என கூறினால் , சந்தோசமாக ஒதுங்கி கொண்டு ஓய்வெடுப்பேன். என கூறினார்.

தயார்படுத்தி கொள்ள வேண்டும் : ஆனால், அதற்கு உங்களை நீங்கள் முழுதாக தயார்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன். இந்த விடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்