எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு அடங்கிய கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
புகைப்பட கண்காட்சி : திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
70 ஆண்டுகால பயணம் : எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதில் கமல்ஹாசன் உடன், அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அரசியலுக்கு அப்பால் உள்ள நட்பு : புகைப்பட கண்காட்சி முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை பற்றி பேசினார். அவர் கூறுகையில், கலைஞர் மகனாக ஸ்டாலின் இருக்கும் போதே நன்றாக தெரியும். எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பால் உள்ள நட்பு.
படிப்படியாக உயர்ந்தவர் : நான் அந்த கண்காட்சி குறிப்பேட்டில் குறிப்பிடுகையில் , கலைஞரின் மகன் என்பதால் மாபெரும் சந்தோசம் நிறைய உண்டு. அதே போல அவருக்கு சவால்களும் உண்டு. அந்த சவால்களை ஏற்று திமுக தொண்டனாக தொடங்கி, இளைஞரணி தலைவராக, மேயராக , எம்.எல்.ஏவாக , அமைச்சராக, துணை முதல்வராக, தற்போது முதல்வராக என படிப்படியாக உயர்ந்து வந்துள்ளார்.
தமிழர்களின் சரித்திரம் : கலைஞரின் மகன் என காட்டிக்கொள்ளாமல் தொண்டனாக இருந்து பொறுமை காத்து, தனது திறமை மூலம் நிரூபித்துள்ளார். என குறிப்பிட்டு , தமிழர்களின் சரித்திரத்தை நினைவு படுத்த வேண்டும். சிலர் தமிழர்களின் சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள் அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் நல்ல செய்தி தபாலில் வரும். கெட்ட செய்தி தந்தியில் வரும் என குறிப்பிட்டார்.
கிளைமேக்ஸ் கேட்காதீங்க : அடுத்ததாக இதே போல நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். அது இப்போது கூற முடியாது. படத்தில் கூட சீன் பை சீன் தான் (ஒவ்வொரு காட்சியாக) கதை கூறுவார்கள். நீங்கள் இப்போதே கிளைமேக்ஸ் கேட்கிறீர்களே என ஜாலியாக பதில் கூறிவிட்டு, இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறிவிட்டு நகர்ந்தார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…