முதல்வரின் புகைப்பட கண்காட்சி.! இப்பொதே கிளைமேக்ஸ் கேக்காதீங்க.. கமல்ஹாசன் ஜாலியான பதில்.!

Default Image

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு அடங்கிய கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். 

நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

புகைப்பட கண்காட்சி : திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

70 ஆண்டுகால பயணம் : எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதில் கமல்ஹாசன் உடன், அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அரசியலுக்கு அப்பால் உள்ள நட்பு : புகைப்பட கண்காட்சி முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை பற்றி பேசினார். அவர் கூறுகையில், கலைஞர் மகனாக ஸ்டாலின் இருக்கும் போதே நன்றாக தெரியும். எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பால் உள்ள நட்பு.

படிப்படியாக உயர்ந்தவர் : நான் அந்த கண்காட்சி குறிப்பேட்டில் குறிப்பிடுகையில் , கலைஞரின் மகன் என்பதால் மாபெரும் சந்தோசம் நிறைய உண்டு. அதே போல அவருக்கு சவால்களும் உண்டு. அந்த சவால்களை ஏற்று திமுக தொண்டனாக தொடங்கி, இளைஞரணி தலைவராக, மேயராக , எம்.எல்.ஏவாக , அமைச்சராக, துணை முதல்வராக, தற்போது முதல்வராக என படிப்படியாக உயர்ந்து வந்துள்ளார்.

தமிழர்களின் சரித்திரம் : கலைஞரின் மகன் என காட்டிக்கொள்ளாமல் தொண்டனாக இருந்து பொறுமை காத்து, தனது திறமை மூலம் நிரூபித்துள்ளார். என குறிப்பிட்டு , தமிழர்களின் சரித்திரத்தை நினைவு படுத்த வேண்டும். சிலர் தமிழர்களின் சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள் அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் நல்ல செய்தி தபாலில் வரும். கெட்ட செய்தி தந்தியில் வரும் என குறிப்பிட்டார்.

கிளைமேக்ஸ் கேட்காதீங்க : அடுத்ததாக இதே போல நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். அது இப்போது கூற முடியாது. படத்தில் கூட சீன் பை சீன் தான் (ஒவ்வொரு காட்சியாக) கதை கூறுவார்கள். நீங்கள்  இப்போதே கிளைமேக்ஸ் கேட்கிறீர்களே என ஜாலியாக பதில் கூறிவிட்டு, இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறிவிட்டு நகர்ந்தார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்