4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார்.
இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை , சேலம், திண்டுக்கல், கரூர் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல் , தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், நாகை ,சீர்காழி, மயிலாடுதுறை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தமாக 150 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் 3-கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/7QDcfG18KA
— Kamal Haasan (@ikamalhaasan) January 29, 2022