கிராம சபை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு வழங்கிய கமல்ஹாசன்!

கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்துள்ளோம். இதுபோன்று தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர் என கூறினார்.
ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர். pic.twitter.com/iUYzjgIfe6
— Kamal Haasan (@ikamalhaasan) August 2, 2021