கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை- ஹெச்.ராஜா

- நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு அதிகாரமில்லை என்று கமல் கூறினார்.
- கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துளளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.கமலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தெரிவித்த கருத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு அதிகாரமில்லை. மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை.குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா பற்றி அறியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவது பற்றிய முதல்வரின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025