கமல்ஹாசன் கோவைக்கு பயணத்தின் போது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை..!
கோவைக்கு பயணத்தின் போது கமல்ஹாசன் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.
கோவை மக்களைச் சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாளை கோயம்புத்தூர் செல்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே என தெரிவித்து இருந்தார்.
என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே.
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2021
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் வருகிற 01.08.2021 அன்று இரவு கோவை வருகிறார். 02-8-2021 மற்றும் 03-08-2021 அன்று கோவையில் இருந்தாலும், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பின்பற்றியும் மக்கள் பாதுகாப்பை கருதியும், கமல்ஹாசன் அவர்கள் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும்,கமல்ஹாசன் அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் கூடுவதையும் தவிர்க்க வேண்டுகிறேன். அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.