மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டங்களையும், கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த இரு தினங்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கு கழகங்களுடன் கூட்டணி அமைக்காது, மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று கமல்ஹாசன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 3-வது நாளாக ஆலோசனை நடத்தவுள்ளார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 3-வது நாளாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டமானது காலையில் புதுச்சேரி சட்டமன்றத் நிர்வாகிகளுடனும், மாலையில் சென்னை மற்றும் புறநகர் சட்டமன்ற நிர்வாகிகளுடனும் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்காக வரும் போது அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பை கொடுக்க காரில் இருந்து நன்றியை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இறுதி , ஆலோசனை தினமான இன்று கமல்ஹாசன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…