TVK கட்சி தலைவர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என தன்னார்வ அமைப்பாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது அரசியல் பயணத்தையும் ஆரம்பித்து விட்டார் விஜய்.

விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

“தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியானது ஊழல் சக்திகளுக்கு எதிரானது, சாதி மத பேதம் என மக்களை பிரித்தாளும் கட்சிகளுக்கு எதிரானது என அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் TVK கட்சி தலைவர் விஜய்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி  பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜய்க்கு நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர்.

கமல்ஹாசன், தொலைபேசியில் TVK கட்சி தலைவர் விஜயை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி தொடங்கிய முடிவுக்கு பாராட்டுகள் என்றும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகள் என்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் .

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

11 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

11 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

12 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

13 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

15 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

15 hours ago