“இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி” டாஸ்மாக் மூடல் குறித்து கமலஹாசன் கருத்து!
டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகர் மற்றும் மக்கள் நீதி மன்ற தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபித்திருக்கிறது எனவும், மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல, எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. எனவும், இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெவித்தார்.
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020