நான் கொண்ட காதல்., அதையும் தாண்டி புனிதமானது..! தீவிர பிரச்சாரத்தில் கமல்…

Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்புள்ள பகுதியில் கமல்ஹாசன், வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், நான் மக்கள் மீது வைத்துள்ள காதல் என்பது சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என கூறினார் .
மேலும், நான் இங்கு எனது சீட்டுக்காக வரவில்லை. எனது தம்பி துரை வைகோவின் சீட்டுக்காக இங்கே வந்துள்ளேன். எனக்கான ஒரு சீட்டு உங்கள் மனங்களில் இல்லங்களில் என்றும் இருக்கும். அதனை நீங்கள் கொடுத்து உள்ளீர்கள் என பேசினார்.
அடுத்து, ஒரு அரசை மக்களும் எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கலாம் அதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால், இப்போது விமர்சித்தால் தேச விரோதம் என்கிறார்கள். தற்போது இந்திய நாட்டின் அரசியல் சாசன புத்தகம் பாதுகாக்க பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்பட்டால் தான் மற்ற புத்தகங்களும் பாதுகாக்கப்படும். திராவிட மாடலை அனைவரும் ஃபாலோ செய்தால் இந்தியாவே பாரட்டபடும் என நேற்றைய பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025