மக்களைவை தேர்தலில் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது . ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…