மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்கள் நல்வாழ்விற்கான 7 செயல்திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில்,
1. சீருடைப் பணியில் 50% பெண்கள்:
அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத்துறையிலும் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும்.
2.துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு:
துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கென்றே அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், 181 பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.
3. பெண்களுக்கான தயாரிப்புகளின் பொது விநியோகம்:
பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம்பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.
4.பெண்களுக்கான மாவட்ட அளவிலான மகளிர் வங்கி:
பெண்களால்… பெண்களுக்காக… பெண்களுக்கென்று இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும்.
5. ஒற்றை தாய்மார்களுக்கான ஆதரவின் குடை:
கல்வி, வேலை, திறன் மேம்பாடு, மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
6.சிறப்பு பராமரிப்பு கட்டமைப்புகள்:
அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவதை உறுதி செய்தல் (பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்றவை..)
7.இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் :
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…