‘கல்பனா சாவ்லா’ விருது – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Default Image

2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள ‘கல்பனா சாவ்லா’ விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2022-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம் சென்னை 600009 அவர்களுக்கு அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாக 30.06.2022-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்