கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….!!!
முல்லைவேந்தன் சென்னையில் உள்ள கல்லூரியில், பி.எஸ்.சி கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை பெயர் சக்தி, இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவரது மகன் முல்லைவேந்தன், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், இவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அதிலிருந்து தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு நேற்று வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் மின்விசிறியில் புடவையை மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.