உங்கள் மகளின் செல்போனை ஒப்படைக்காவிட்டால் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை பெற்றோர்கள் தர மறுத்தால், பெற்றோர்களை விசாரிக்க நேரிடும். – சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தங்கள் மகள் உயிரிழந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும். என அதில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், மாணவி விடுதியில் பயன்படுத்திய செல்போனை பெற்றோர்கள் தர மறுத்து வருகிறார்கள். இதுவரை நான்கு முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும், செல்போனை அவர்கள் எங்களிடம் (போலீசாரிடம்) ஒப்படைக்கவில்லை. என காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறினார்.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கூறுகையில், மாணவியின் செல்போனை பெற்றோர்கள் தர மறுத்தால், பெற்றோர்களை விசாரிக்க நேரிடும். என கூறி அனுப்பினர். இந்த வழக்கை பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போலீசார் தரப்பில் இன்னும் இரண்டு மாதங்களில் இந்த வழக்கு விசாரணை முழுமையாக நிறைவு பெற்று விடும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.