கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – தற்போதைய நிலை என்ன?

விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகாரித்து கொண்டே செல்கிறது.
நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை விபரம்
விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில், 90 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது நடவடிக்கை
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார் ஆகிய 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து அதிரடி நடவடிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார். இதன் மூலம் விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 21 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் புலனாய்வுக் குழு
இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025