TN Assembly 2024 [Screenshot of X/Twittter Videos]
சென்னை: தமிழக சட்டப்பேரவை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்க இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்குள் நுழைந்தனர்.
கேள்வி நேரம் தொடங்கி, அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்க முனைகையில், அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள், கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கூறினர், மேலும், முதலமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு வசனங்கள் அடங்கிய காகிதங்களையும் சட்டப்பேரவையில் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்து, முதலில் 10 முதல் 11 மணிவரையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் விவாதம் நடைபெறும் என்று கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை பாதுகாவலர்கள் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால், தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு நிலவி வருகிறது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…