கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சென்றடைந்த த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த விஷச்சாராயத்தால் மரணம் அடைந்த கருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்க பலர் நேரில் வருகை தந்தனர்.
ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஆகியோர் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிந்துள்ளார்.
தற்பொழுது, விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்ததோடு, விரைவில் நலமுடன் வீடு திரும்புவர் என்று அவர்களைது குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த விஷச்சாராயம் அருந்திய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் தனது எக்ஸ் தள வாயிலாக, “இரங்கல் தெரிவித்ததோடு, தமிழக அரசு அலட்சியத்தை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்” என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…