கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிப்பு….முதல்வர் உத்தரவு..!!
தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரைக்கு பதிலுரை அளிக்கும் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி நகராட்சியை தமிழகத்தின் 33_வது மாவட்டமாக அறிவித்துள்ளார்.குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் C.V சண்முகம் அவர்களின் வைத்த கோரிக்கையயை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் MGR நூற்றாண்டு விழா நடைபெற்ற போது கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்ட்து.இந்நிலையில் 12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பெரிய மாவட்டமாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி நகராட்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுள்ளது. கள்ளக்குறிச்சிகென்று தனி ஆட்சியர் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.