கண்ணீர் கடலில் கள்ளக்குறிச்சி – ஒரே இடத்தில் 21 உடல்கள் நல்லடக்கம் .!

Kallkuruchi Death Funeral

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 42 பேரில் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில தகனம் செய்யப்படும் நிலையில், கருணாபுரமே கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உயிரிழந்த 21 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதில், உயிரிழந்த 21 பேரில் பிரவீன், சுரேஷ் ஆகிய இருவரது உடல்கள் மட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டன.

அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களது முறைப்படி உடல்களை அடக்கம் செய்யப்பட்டன. அதன்பின் அடுத்ததாக மீண்டும் ஒருவரின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியதால் தகனம் செய்யும் பணி சற்று தாமதமாகியிருந்தது. இதனை பார்த்து இறந்தவர்களுக்காக வானமும் கண்ணீர் வடிப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

தற்போது, மழை நின்றவுடன் மீண்டும் தகனம் செய்யும் பணியானது மிண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒன்றின்பின் ஒன்றாக, தகனம் செய்யப்பட்டு வருகிறது முதற்கட்டமாக 21 பேரின் உடல்களை கோமுகி ஆற்றங்கரைப் பகுதியில் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்