கள்ளக்குறிச்சி கலவரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!
கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தால் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.