கள்ளக்காதலன், தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற தாய்..!
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் கள்ளக்காதலன்,தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற சோகமான சம்பவம்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசர் இவருடைய மனைவி சகாயராணி இவர்களுடைய மகள் எஸ்தர் பேபி 39 வயதான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் பிறகு தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் சகாயராணி வீட்டிற்கு எஸ்தர் பேபி வந்துவிட்டார்.
இந்த நிலையில் சகாயராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது அந்த கள்ளத்தொடர்பு அவருடைய மகள் எஸ்தர் பேபி தெரியவந்ததும் இதையடுத்து தனது தாயை எஸ்தர் பேபி கண்டித்தார் ஆனால் சகாயராணி தனது கள்ளத்தொடர்பை பழக்கத்தை விடவில்லை,
இந்த நிலையில் எஸ்தர் பேபி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் எஸ்தர் பேபி கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர், இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எஸ்தர் பேபி தேடிவந்தனர் ஆனாலும் அவரைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
மேலும் சகாயராணியின் தம்பி சேவியர் அருண் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர் , அங்கு அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அங்கு விசாரித்தபோது எஸ்தர் பேபி தந்தை அப்துல் காதர் பள்ளிக்கரணை காவல்நிலையத் திற்கு சென்று அருண் சேவியர் சென்னை வந்த பிறகுதான் தன் மகளைக் காணாமல் போனதாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து மேலும் போலீசார் சேவியர் அருணை விசாரித்தனர் விசாரணையின்போது சேவியர் அருண் மற்றும் சகாயராணி, பாக்யராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து அவர் குடியிருந்த வீட்டுக்குள்ளேயே புதைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் போலீசாரிடம் சேவியர் அருணை ஸ்தர்பேபியை கொன்று புதைத்த இடத்தை காண்பிக்குமாறு கூறினர். இதையடுத்து எஸ்தர்பேபி புதைக்கப்பட்ட இடத்தை அவர் காட்டினர். மேலும் எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவருடைய உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய தாமதமானது.
இந்த நிலையில் நேற்று போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது, கொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருடைய எலும்புகள் மட்டுமே கிடைத்தன. அதை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.