கலாஷேத்ரா மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்..!
கலாக்ஷேத்ரா மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என முதல்வருக்கு கடிதம்
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
மாணவிகள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தோறும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வருக்கு கடிதம்
இந்த நிலையில், தமிழக மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாணவிகளிடம் புகார் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.