கலாஷேத்ரா பாலியல் விவகாரம்; ஹரிபத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி.!
கலாக்ஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கில், கைதான ஹரிபத்மனின் ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில் செயல்பட்டு வரும், கலாக்ஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்: இதனையடுத்து கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபத்மனுக்கு, ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.
ஜாமின் தள்ளுபடி: இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கும்படி நீதிமன்றத்தில் ஹரி பத்மன் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.