கலாஷேத்ரா விவகாரம் – மாணவர்கள் வெளியே வந்து போராட அனுமதித்திருக்க கூடாது : சீமான்
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சீமான் பேட்டி.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
இந்த பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் தமிழக டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ‘கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்கள் வெளியே வந்து போராட அனுமதித்திருக்க கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் குழு மட்டுமே அமைக்கப்படுகிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.