கலாஷேத்ரா விவகாரம் – விரிவான கொள்கையை வகுக்க ஐகோர்ட் உத்தரவு!
கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகார்கள் குறித்து விரிவான கொள்கையை வகுக்க உத்தரவு.
கலாஷேத்ரா நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கை வகுக்க ஆணையிடப்பட்டுள்ளது. மாணவிகள் 7 பேர் தொடர்ந்த வழக்கில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உள் விசாரணை குழுவில் பெற்றோர், மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். பாலியல் தொடர்பான வழக்கை காவல் துறையும், நீதிபதி கண்ணன் குழுவும் தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்து, உள் விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி 7 மாணவிகள் தாக்கல் செய்த வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.