மாணவிகள் புகார் அளித்த மூன்று பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்க கூடாது என ஆணைய தலைவர் குமரி பேட்டி
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ஆஜர்
இதனையடுத்து, மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார். கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தி வருகிறார்.
ஆணைய தலைவர் குமரி பேட்டி
விசாரணை நிறைவடைந்த பின் செய்தியாளர்களுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாணவிகள் புகார் அளித்த மூன்று பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்க கூடாது என இயக்குனரிடம் கூறியுள்ளேன்.
கலாஷேத்ரா தொடர்பாக மேலும் சில ஆவணங்களை இயக்குனர் ரேவதியிடம் கேட்டுள்ளேன். மாணவிகளின் புகார் மீது கலாஷேத்ரா எடுத்த நடவடிக்கைகள் பற்றி இயக்குனரிடம் கேட்டறிந்தேன். போராட்டத்தில் மீண்டும் ஈடுபட உள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். கல்லூரியின் ஐசிசி கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆவணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…