கலாஷேத்ரா விவகாரம் : ஹரி பத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
பாலியல் புகாரில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகாரில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மாநில மகளிர் ஆணையம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.