கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் பாலியல் புகாரில் 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது .
தற்போது, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். இது போக, மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் எனவும் நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. எங்கு, எப்படி தேர்வுகள் நடைபெறும் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…