டிருவெற்றியூர் அருகே, மணலி மண்டலம் பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 800 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் படிக்க வேண்டிய அவலநிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் கசிந்து வகுப்பறைக்குள் விழுவதால் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரக் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று அவர், இரண்டு தளங்கள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் அமைத்துத்தர தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.50 கோடியை ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் அந்த ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ள இடங்களை கலாநிதி வீராசாமி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது 6 மாதத்திற்குள் இந்த கட்டுமான பணி முடிவடைந்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த கட்டிடம் மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஒரு தூண்டு விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…