கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கல்லூரி மாணவர்கள் போராட்டம்; நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கடிதம்.!
சென்னை கலாக்ஷேத்ரா மாணவர்கள், பாலியல் தொல்லை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வருக்கு கடிதம்.
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.
புகாருக்கு கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கல்லூரி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்குவதால் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் ஆசிரியர் உட்பட 4 பேர்மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தினால் கல்லூரியும் ஏப்ரல் 6 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.