கலாக்ஷேத்ரா பாலியல் புகார்; மாணவிகளிடம் தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை.!
சென்னை கலாக்ஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக, மாணவிகளிடம் தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்தஉள்ளதாக தகவல்.
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தோறும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் மாணவிகள் மின்னஞ்சலில் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டம் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுவரும் நேரத்தில், தமிழக மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாணவிகளிடம் புகார் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையமும் தமிழக டிஜிபிக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.