கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு.
ஹரிபத்மன் கைது: சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன், பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்: இதனையடுத்து கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக மாணவிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரப்போவதாக கூறியிருந்தனர்.
போராட்டம் தொடரும்: இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் இன்று மாணவிகளிடம் வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும் எழுத்துப்பூர்வ அறிக்கை அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்ற காவல்: இந்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபத்மனுக்கு, ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…