அய்யோ.. போச்சே.. எல்லாம் போச்சே.. ‘கலைமாமணி விருதை காணோம்’ – கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்.!
வாடகை வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருது காணவில்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
போலீசா வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த விருதுகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி புக் என அனைத்தையும் காணவில்லை, நான் வாடகை பணம் கொடுத்து விட்டேன், ஆனாலும் அத்துமீறி வீட்டை உடைத்து உரிமையாளர் அடாவடி செய்துள்ளார் என்று கஞ்சா கருப்பு கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் கஞ்சா கருப்பு மிரட்டுவதாக உரிமையாளர் புகார் கூறியிருந்த நிலையில், வாடகை பணம் கொடுத்து விட்டேன், எனினும் அத்துமீறி வீட்டை உரிமையாளர் உடைத்துள்ளார் என கஞ்சா கருப்பு தற்போது புகார் அளித்திருக்கிறார்.
வாடகை கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் சொல்கிறார், கடந்த மாதம் கூட ரூ.40,000 அனுப்பியதற்கான ஆதாரம் உள்ளது. மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, “நான் என்ன இங்க அந்த மாதிரி தொழிலா பண்ணிட்டு இருந்தேன்? என் பெட்ரூமுக்குள் அத்துமீறி போயிருக்காங்க. சாவி என் கிட்ட இருக்கும் போது எப்படி பூட்டை உடைக்கலாம்? என்னோட கலைமாமணி அவார்ட்டை திருடிருக்காங்க. என்ன மாதிரி மிமிக்ரி பண்ற ஆள வச்சி என் மேல பழி போடுறாங்க. நான் வாடகை பணத்தை கொடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.