கலை பற்றி தெரியாததவர்களுக்கு கலைமாமணி விருது.! – உயர்நீதிமன்றம் விமர்சனம்.!
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? என உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சனம் செய்துள்ளாது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் சார்பாக அந்த வருடம் கலையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும்.
ஆனால், கடந்த 2019, 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் 2021ல் மொத்தமாகா கொடுக்கப்பட்டது. அப்போது அவசகதியில் தகுதியில்லாத சிலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டது. அந்த சான்றிதழில் உறுப்பினர், செயலர் கையெழுத்து கூட இல்லாமல் கலைமாமணி சான்று கொடுக்கப்பட்டது எனவும், அப்படி வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி வாங்க வேண்டும் எனவும் அதில் குறிபிட பட்டு இருந்து.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கலைமாமணி விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கபடுகிறது ? எவ்வாறு இவர்களை தேர்வு செய்கிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பினர். தகுதி இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. என கடுமையாக நீதிபதிகள் விமர்சனம் செய்தார்கள்.
இதனை அடுத்து, தமிழக அரசின் இயல் இசை நாடக துறையின் செயலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை இம்மாதம் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.