சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தனது தந்தைக்கு பிடித்த கிரிக்கெட்டர் தோனி என்று கூறினார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 139 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து, அதன் புதிய பெவிலியனை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த ஸ்டாண்டுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சி.எஸ்.கே கேப்டன் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகவும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கம் மைதானத்தில், புதுப்பிப்பு பணிகளின் மூலம் தற்போது கூடுதலாக 5000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் கலைஞர் பெயரிடப்பட்ட இந்த புதிய பெவிலியனை, கலைஞருக்கு மிகவும் பிடித்த தோனி மற்றும் என். சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைப்பதில் பெருமையாக உணர்கிறேன் என்று கூறினார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…