தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி நாளன்று,பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும்,ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி பண்டிகை பொது இடங்களில் கொண்டாடப்படும் என்றும் அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல, இளைஞர்களே! இதை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.ஏனெனில்,சிறுபான்மை மக்களிடம் பாஜக பற்றி ஒரு சந்தேகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது உண்மைதான்.அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உள்ளது என்று டாக்டர்.கலைஞர் அவர்கள் பேசியது 23.06.1999 அன்று முரசொலி நாளிதழில் வந்துள்ளது.
முத்தமிழ் அறிஞரின் புதல்வருக்கு, தமிழக முதல்வருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…