Kalaignar Women Pension Scheme : மகளிர் உரிமைத் தொகை .! 35 சதவீத விண்ணப்பம் நிராகரிப்பு.!

Tamilnadu CM MK Stalin

திமுக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமை தொகை கூறப்பட்டது. இதன் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் செப்டம்பர் 5 வரையில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் சுமார் 65 சதவீதம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதற்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என காரணங்களும் வெளியாகி உள்ளது.

அதன்படி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் வீட்டில் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கின்றதாகவும், ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், ஆண்டு குடும்ப வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்றும்,

அரசு வேலை வீட்டில் உள்ள யாரேனும் அரசு வேலையில் இருக்கும் நிலையில் அந்த வீட்டு குடும்ப தலைவிக்கும் உரிமை தொகை வழங்கப்படாது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் தொகையானது வந்து சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்