நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,”தலைவர் கலைஞர்,பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகன் உள்ளார்.அவர் பொன்விழா நாயகன்.கலைஞரின் அருகில் அல்ல,அவரது இதயத்திலே ஆசனம் போட்டு அமர்ந்து இருந்தவர் அமைச்சர் துரைமுருகன்.அத்தகைய இடம் எல்லாருக்கும் கிடைக்காது.அவர் எந்த துறைகளை கொடுத்தாலும் முத்திரை பதிப்பார்”,என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “2001-ம் ஆண்டில் இருந்து அமைச்சர் துரைமுருகன் அவர்களது அவை நடவடிக்கைகளை நான் கவனித்து வருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.கருணாநிதியின் அளவில்லாப் பாசத்தையும் அன்பையும் பெற்றவர். அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்”,என்று கூறினார்.
இந்நிலையில்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞர் அவர்களின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர்.
என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எப்போதும் துணையாக நிற்கும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்”,என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…