கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை; மக்களைத்தேடி மருத்துவம் விரிவு- நிதியமைச்சர் உரை.!
2023-24க்கான தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.