ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் நாளை திறப்பு..!
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நாளை கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது சுமார் 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக ஜூன் 20ம் தேதி அதாவது நாளை கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படுகிறது. ஏற்கனவே, ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூன் 20ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,நாளை திறக்கப்படுகிறது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவாக அடுத்த ஓராண்டை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.