திமுக பவள விழாவில் கலைஞர் கருணாநிதி அருகே அமர்ந்த மு.க.ஸ்டாலின்.!
திமுக பவள விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
![Tamilnadu CM MK Stalin - Kalaignar Karunanidhi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/09/Tamilnadu-CM-MK-Stalin-Kalaignar-Karunanidhi.webp)
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு இருக்கையில் யார் அமர்வார்கள் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.
அந்த சமயம் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அப்போது , மேடையில் இருந்த பெரிய இருக்கையில் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அமர்ந்து இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டது. அருகே உள்ள பெரிய இருக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
மு.க.ஸ்டாலின் அருகே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும், கலைஞர் கருணாநிதி காட்சிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு அருகே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். AI தொழில்நுட்ப உதவியுடன் கலைஞர் கருணாநிதி, திமுக பவள விழாவுக்கு வாழ்த்து உரை கூறுவது போல காட்சிப்படுத்தப்பட்டது விழாவில் இருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)