கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை… திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை கிண்டி கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார். சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன், 230 கோடி ரூபாய் செலவில் 15 மாதங்களில் இந்த கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் பரப்பளவில் இந்த கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத்தலைவர் அவர்களால் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழா இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இம்மருத்துவமனையை முதலவர் ஸ்டாலின், இன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.