தந்தை-மகன் கொலை வழக்கு- கைது செய்யப்பட்ட காவலர்களை காவலில் எடுக்க தொடரப்பட்ட மனு விசாரணை!
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு சற்றுநேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக, டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். தற்பொழுது அந்த மனு, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.