வேலூரில் வெற்றி !வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார் கதிர் ஆனந்த்

Default Image

வேலூரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

முதலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தார்.பின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.பின்பு இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

இறுதியாக கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் 477199 வாக்குகள் பெற்று  தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில்  வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார் திமுகவின் கதிர் ஆனந்த்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்