கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த கடம்பூர் ராஜூ.!
கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக ஒரு வாரம் முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கயத்தாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாரு கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துளார். நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.