கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ , அமமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கடம்பூர் ராஜூவும், டிடிவி தினகரன் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தோல்வியை தழுவினார்.
இறுதியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கடம்பூர் ராஜூ இருந்து பெற்றுக்கொண்டார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…